Monday, October 3, 2016

நான் ஓர் குடிகாரன்

நான் ஓர் குடிகாரன்

அஞ்சாறு வருஷம் முன்னாடி
பிஞ்ச லுங்கியோட
பஞ்சுதான் நடு வீதியென
சுள்ளென்ற வெயிலில
சுருங்கி படுத்திருந்தேன்
பெத்த மவன் பள்ளி விட்டு போகையில
தட்டி கூட எழுப்பலையே.
தப்பான அப்பனென
தட்டினால் தன்மானம் சென்றிடுமோ என்றென்றினானோ. . .


ஒழச்ச காசு அஞ்சாறோ. .
பத்தலன்னு
வளச்சி போட்டவளோ
சட்டிகரி தீட்டி
சேர்த்து வச்சதையும்
குடிச்சழிச்சேன். . .
கொண்ட சோகம் ஆருக்கும் சொல்லாம.
கல்லானாலும் கணவனென கொண்டாளே என்னை.
எவள் பெற்ற புண்ணியவதியோ
எனக்கும் வந்து வாக்குப்பட்டாலே. . .

என் மாமன் வீடு வந்தாலும்
யாரடி அது சக்காலத்தியென
அஞ்சடி கண்ணத்தில் போட்டுக் கேட்டிருக்கேன்.
போதையில அந்தப் பேதைய பெற்றவள் என்று கூட அறியலையே. .
வாக்கப்பட்டு வந்துட்டாலே.
வாழ மட்டும் போகத்தானே வேணும். .
என்றுதான் என்னியிருந்தேன். . .
அவள் வேஷம் கலைந்து ரோஷத்தோட அப்பன் வீட்டுக்கே போனாலே. .

சீர் வந்த வீட்டினையும்
கூர் போட்டு வித்து
ஊர் விட்டுப் போய்
சீரழிந்து கெட்டுப் போனேன்.
தாரமோடு பெத்ததுகளும்
தாரத்தை பெற்றவனும்
நாளைக்கே வீடு கேட்டால்
என்ன பதில் நான் சொல்வேன். . . . .

ஓரிரண்டு வருஷம் போயிடுச்சி.
ஊரெல்லாம் ஒதிக்கிடுச்சி.
பெத்தவளும் கூட இல்ல.
செத்தாளும் கேட்க நாதியில்ல. .
விதிதேடி வீதியில் அலைந்தேன். .
குடித்தால்தான் மதிப்பென்று
படிக்காத நண்பனொருத்தன் சொன்னனே. .
வேடிக்கையோ மாறிப் போனது.
மதிப்பெல்லாம் மங்கிப் போனது. . .
குடித்ததால் குடியிலந்தேன்.
தன்மானமிலந்து தலை குனிந்தேன்.
வெட்கமிலந்தேன்.
தன்னம்பிக்கையிலந்தேன்.
இலக்க இனி ஒன்றுமேயில்லை
என் உயிரைத் தவிர. . . . . .

நிதானத்துடன் ஓர் நாள் என்யினக் குடிகாரனை பார்த்தேன். .
தெருநாயை கவனிக்க நாயுன்டு
நம் நிலமைக்கான நாடேயில்லை. .
நம் நிலை இதுவென உணர்து
செய்த பாவம் புண்ணியம் தெடியலைந்து திரிந்தேன். . .
முடிவில்லா வாழ்க்கையில்
முடித்தவளும் ஓர் நாள் தேடி வருவாளென. .
நிரைவேரா ஆசையுடன்
தெருவோரத்திலிருந்து அழுது புலம்பும்
*நான் ஒர் குடிகாரன்*
திருமலையூர் கவிஞன் ரைஸ்*
1ST YEAR
SOUTHEASTERN UNIVERSITY OF SRI LANKA

No comments:

Post a Comment